பணி நிரந்தரம் கோரி மின் கம்பத்தில் ஏறி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
மின் கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் மின்மாற்றி, மின்கம்பத்தில் ஏறி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுத்தனர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணியின் போது உயிரிழக்கும் ஊழியர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கி பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கடந்த 17ஆம் தேதி போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசு உரிய உத்தரவாதம் அளிக்காததால் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை, நெல்லூர் என அடுத்தடுத்து கடந்த 10நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஆந்திராவில் போராடிய தொழிலாளர்கள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தமிழக - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் திரும்பினர்.
மின்சாரத்தை ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள மின்மாற்றி களில் மின் இணைப்பை நிறுத்திவிட்டு மின்மாற்றி, மின்கம்பத்திலும் ஏறி போராட்டத்தை மேற்கொண்டனர். சாலையில் அமர்ந்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தும் கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மின்மாற்றியில் இருந்தும், மின்கம்பத்தில் இருந்தும் தொழிலாளர்களை கீழே இறக்க செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஈடுபட்டனர்.
அப்போது இது குறித்து போராட்டக்காரர்கள் தெரிவிக்கையில் சுமார் பத்து நாட்களுக்கு மேலாக நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும் அரசு தற்போது வரை எவ்வித நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறவர்களாகவும், தொழிலாளர் கோரிக்கை ஏற்று ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வரும் தங்களை பணி நிரந்தர செய்ய பல்வேறு முறை அரசை நாடியும் கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தும் போராட்டங்களை கையில் எடுத்தும் தற்போது வரை அரசு எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தில் ஆரம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu