திறன் வளர் பயிற்சியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம்: முன்னாள் அமைச்சர் தகவல்
கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் அடுத்துள்ள ஸ்ரீ சிட்டி தொழிற்பேட்டையில் சிஐஇஎல் குழுமத்தின் 84வது கிளையை அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா கே.பாண்டியராஜன தொடக்கி வைத்து பேசினார்
படித்த இளைஞர்களுக்கு திறன் வளர் பயிற்சி அளிப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக முன்னாள் அமைச்சரும், சிஐஇஎல் குழும தலைவருமான மாபா கே.பாண்டியராஜன் தெரிவித்தார்
கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் அடுத்துள்ள ஸ்ரீ சிட்டி தொழிற்பேட்டையில் சிஐஇஎல் குழுமத்தின் 84வது கிளையை அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா கே.பாண்டியராஜன தொடக்கி வைத்து பேசியதாவது: ஸ்ரீ சிட்டி தொழிற்பேட்டையில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு திறமையான பணியாளர்களை வழங்க சிஐஇஎல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியா உலக அளவில் முக்கிய உற்பத்தி மையமாக நிலைநிறுத்திக் கொள்ள தயாராகி வருகின்றது . இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் திறன் மேம்பாடு முக்கிய பங்கு வகித்து வருகிறது .
சிஐஇஎல் மூலம் நாடு முழுக்க உள்ள திறமைமிக்க பணியாளர்களை கண்டறிந்து அவர்களின் திறமைகளை பயன் படுத்திக் கொள்ளவும், மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் தொழில் முனைவோர் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தேசிய தொழிற் பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் இளைஞர்களை அவர்களது எதிர்கால வேலைகளுக்கு தயார் படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
திறன் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் தருவதோடு, திறமைகளை ஒன்றிணைத்து, அதனை துரிதப்படுத்தி, செயல்பாட்டை மேம்படுத்தும் பணியில் சிஐஇஎல் முயன்று வருகின்றது. இந்தியாவிலேயே திறன் வளர் பயிற்சி அளிப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது . சிஐஇஎல் நிறுவனம் தமிழகத்தில் 23 இடங்களில் திறன் வளர் பயிற்சி மையங்களை நடத்தி வரும் நிலையில், தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, பொறியியல் படித்த கிராமப்புற மாணவர் களை தேடி அவர்களுக்கு திறன் வளர் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தொழிற்பேட்டையில் ஒரு நாளைக்கு 100பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்று இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி, அவர்களுக்கு திறன் வளர் பயிற்சியை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பழவேற்காடு மற்றும் கும்மிடிப்பூண்டி மட்டுமல்லாது, தமிழக எல்லையை ஒட்டிய ஆந்திர பகுதி மீனவர்களுக்காக மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தில் தொழிற்பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன்.
நிகழ்வில், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் செயல் அலுவலர் ஆதித்ய நாராயணன் ,முதுநிலை மேலாளர் யேசுதாஸ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu