தமிழக -ஆந்திர எல்லையில் 108 மதுபாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது

தமிழக -ஆந்திர எல்லையில் 108 மதுபாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது
X
தமிழக- ஆந்திரா எல்லையில் 108 மதுபாட்டில்கள் கடத்தி வந்த இருவரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்பொழுது அதிவேகமாக ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகம் நோக்கி வந்த 2 இருசக்கர வாகனங்களை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் துரத்திப் பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஆந்திர மாநில மதுக்கடையில் இருந்து வாங்கி தமிழக எல்லைக்கு விற்பனைக்காக கடத்திவரப்பட்ட 108 மது பாட்டில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் கடத்தலில் ஈடுபட்ட கும்மிடிப்பூண்டி பெரிய சோழியம்பாக்கத்தை சேர்ந்த சிவா என்கிற பரமசிவம் (37) சென்னை செங்குன்றத்தை சேர்ந்த காந்தராஜ் (32) ஆகியோரை கைது செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கும் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!