பெரியபாளையம் சாய்பாபா கோவிலில் குரு பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜைகள்

பெரியபாளையம் சாய்பாபா கோவிலில் குரு பௌர்ணமி முன்னிட்டு  சிறப்பு பூஜைகள்
X

சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபா.

பெரியபாளையம் சாய்பாபா கோவிலில் குரு பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜைகள்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவிலில் குரு பௌர்ணமி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பாபாவிற்கு அதிகாலை 6:00 மணி அளவில் காக்கடாரத்தி காலை7.மணி அளவில் கோவிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்களின் திருக்கரங்களால் பாலாபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த யாகசாலையில் மகா கணபதி ஹோமம் நவக்கிரக சாந்தி ஹோமம் சாய் மகா சங்கல்பம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றது. காலை 8.55 மணி அளவில் சத்யநாராயண பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்து பாபாவிற்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகங்கள் அலங்காரம் செய்யப்பட்டு மதியம் 12 மணி ஆரத்தியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவின் பாடல்களை பாடினார்கள். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்ட பின்னர் சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சிவா சாயி சேவா அறக்கட்டளை நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!