/* */

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜைகள் இன்று துவக்கம்

காலை 5:00 மணிக்கு கோ பூஜை, மூலவர் சுயம்பு அம்மனுக்கு மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது

HIGHLIGHTS

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜைகள் இன்று துவக்கம்
X

பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் (பைல் படம்).

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆற்றங்கரை அருகே உள்ளது பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோவில். இக்கோயிலில் ஆடி மாத திருவிழா, கோ பூஜை, மூலவர் சுயம்பு அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் இன்று நடைபெற்றது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி, ஆதிரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநிலங்களிலிருந்து, ஏராளமான பக்தர்கள் வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட நாட்களில் கோவிலுக்கு வந்து தங்கி இருந்து வழிபட்டது செல்வார்கள். அப்போது மொட்டை அடித்து, அம்மனுக்கு பொங்கல் வைத்து, ஆடு, கோழி என பலியிட்டு பக்தர்கள் உடல் முழுவதும் வேப்பிலை ஆடை அணிந்து கையில் தேங்காய் ஏந்தி கோவிலை வலம் வந்து தாங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.

இங்கு நடைபெறும் விழாக்களில், ஆடி மாத விழா சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வார காலங்கள் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். வரும் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆடி மாதம் முதல் வாரம் துவங்க இருக்கிறது. இன்று, ஆடி மாத துவக்க விழா பூஜை நடைபெற்றது. காலை 5:00 மணிக்கு கோ பூஜை, மூலவர் சுயம்பு அம்மனுக்கு மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது. நாளை, வாழை மர பூஜை, கணபதி ஹோமம், மஹா அபிஷேகம், மாதங்கி அம்மனுக்கு அபிஷேகம், விநாயகருக்கு, 108 பால்குட அபிஷேகம் மற்றும் விசேஷ அலங்காரம், மஹா தீபாராதனை காட்டப்படும். மாலை 6:00 மணிக்கு உற்சவர் விநாயகர் மூஷிக வாகனத்தில் திரு வீதியுலா நடைபெற உள்ளது .

Updated On: 13 July 2022 3:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது