திருவள்ளூர் சிப்காட் தொழிற்பேட்டையில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது!

திருவள்ளூர் சிப்காட் தொழிற்பேட்டையில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது!
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா.

சிப்காட் தொழிற்பேட்டையில் 2 கிலோ கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் சிப்காட் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகளிடம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவரிடம் சுமார் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செங்குன்றத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்பது தெரியவந்தது. பின்பு அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story