குண்டும் குழியுமாக உள்ள காக்க வாக்கம் சாலையை சீரமைக்க கோரிக்கை

குண்டும் குழியுமாக உள்ள காக்க வாக்கம் சாலையை சீரமைக்க கோரிக்கை
X

பெரியபாளையம் அருகே கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக  சீரமைக்கப்படாத காக்கவாக்கம் - தொளவேடு கிராமசாலை 

ஊராட்சி நிர்வாகத்திடமும் மனு அளித்தும். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை

பெரியபாளையம் அருகேயுள்ள காக்கவாக்கம் - தொளவேடு கிராம சாலையை 10 ஆண்டாக சீரமைக்கவில்லை என்றும் உடனே சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்கோட்டை அருகே தொளவேடு கிராமத்தில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள், பள்ளி , கல்லூரி மாணவ - மாணவிகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

இவர்கள் வேலைக்கு செல்வதற்கும், விவசாயிகள் அவர்களின் விலை நிலங்களில் விளைவிக்கும் கத்திரி, வெண்டைக்காய், பூ , போன்றவற்றை சென்னை கோயம்பேட்டிற்கு எடுத்து செல்வதற்கும், மாணவ - மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கும் காக்கவாக்கம் - தொளவேடு கிராம மக்கள் சாலையை பயன்படுத்தி தண்டலம், பாலவாக்கம், பெரியபாளையம், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர்களின் வேலை நிமித்தமாக சென்று வருகின்றனர்.

இந்நிலையில், காக்கவாக்கம் - தொளவேடு கிராம சாலை குண்டும், குழியுமாகவும் , தார் சாலை மண் சாலையாகவும் மாறி படு மோசமாக காணப்பட்டது . இதையடுத்து அப்பகுதி மக்கள் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததின் பேரில் கடந்த 10 வருடத்திற்கு முன்பு சாலை அமைத்தனர் . ஆனால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெய்த மழைக்கு கிராம சாலை குண்டும் குழியுமாக மாறி பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது . இதனால் இருசக்கரம் , ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகன ஓட்டிகளும், பள்ளி வாகனங்களும் இந்த வழியில் செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிள் செல்பவர்கள் கீழே விழுந்து காயமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

இது குறித்து காக்கவாக்கம் - தொளவேடு பகுதி மக்கள் தெரிவித்ததாவது: எங்கள் கிராமத்திற்கு செல்லும் சாலை 10 வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட சாலையாகும். இந்த கிராம சாலை மழையால் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. அதை இன்னும் சீரமைக்கவில்லை , இந்த சாலைக்கு பதில் புதிய சாலை அமைக்க வேண்டும் என கடந்த 2 வருடத்திற்கு முன்பு எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்தோம் . சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடமும் மனு அளித்தும். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்ய, யாரும் வரவில்லை. சாலையை சீரமைக்க நடவடிக்கையும் எடுக்கைவில்லை. என்றும் பழுதடைந்த சாலைக்கு பதில் புதிய தார் சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.,



Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!