பெரியபாளையம் அருகே பழுதடைந்த நியாய விலை கடை கட்டிடத்தை அகற்ற கோரிக்கை
Government Ration Shop -திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே கன்னிகை பேர் ஊராட்சியில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்காக கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போது கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.லட்சம் மதிப்பீட்டில் கன்னிகை பேர் ஊராட்சி இ-சேவை மையம் அருகே நியாய விலை கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இதனால் கன்னிகை பேர் பஜார் பகுதி வசிக்கும் மக்களுக்கு அருகே என்பதால் எளிதாக சென்று பொருட்கள் வாங்கி வந்தனர்.
இந்த நிலையில் கட்டடம் பழுதடைந்து மழைக்காலங்களில் மழைநீர் கசிந்து கடையில் உள்ளே அரிசி,பருப்பு, கோதுமை,சர்க்கரை, எண்ணெய்,உள்ளிட்ட உணவுப் பொருட்கள் நனைந்து வீணாகி வந்த நிலையில் கடை மூடப்பட்டு. இரண்டு ஆண்டு காலமாக சின்ன காலனி பகுதியில் தற்போது இந்த கடை செயல்பட்டு வருகிறது. நீண்ட தூரம் சென்று பொருட்களை வாங்க பஜார் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பழைய பழுதடைந்த நியாய விலை கடை கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடத்தை கட்டி தர வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu