குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்த வாகனங்களை அப்புறப்படுத்த கோரிக்கை.

குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்த வாகனங்களை அப்புறப்படுத்த கோரிக்கை.
X

காவல் நிலைய குடியிருப்பு பின்புறம் வைக்கப்பட்டுள்ள பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்.

பல்வேறு குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்த வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி வைப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகனங்களை அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

பெரியபாளையம் காவல்துறையினரால் பல்வேறு குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் போதிய இடம் வசதி இல்லாத காரணத்தினால் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்திருப்பதால் இரவு நேரங்களில் வந்து செல்லும் வாகனங்கள் விபத்துகள் ஏற்படும் அபாயம் வாகனங்களை சாலை ஓரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் காவல் நிலையம் சார்பில் மணல் கொள்ளை, மது பாட்டில்கள் கடத்தல், கஞ்சா, விபத்துக்குள்ளாகிய போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பெரியபாளையம் காவல்துறை குடியிருப்பு கட்டிடம் முன்பு சாலை ஓரங்களில், நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த வாகனங்கள் மீது அடர்ந்த செடி முள் புதர்களால் மூடி இருப்பதாலும், மேலும் அப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால் அவ்வழியாக வந்து செல்லும் வாகனங்கள் அவற்றை மீது மோதி விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

இது மட்டும் இல்லாமல் காவல் குடியிருப்புகள் சுற்றி நிறைந்த குடியிருப்புகளும் உள்ளது நிலையில் மழை காலங்களில் வாகனங்கள் மழையில் நனைந்து துருப்பிடித்து வீணாகும் நிலை உள்ளது. மேலும் அதில் இரையை தேடி விஷம் நிறைந்த பாம்புகளும் தங்கி விடுவதால் சில நேரங்களில் பாம்புகள் வீட்டுக்குள் புகுந்து விடுகிறதாகவும், அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கையில் போதிய இடம் வசதி இல்லாத காரணத்தினால் பறிமுதல் வாகனங்களை சாலைகளிலும், காவல் நிலைய குடியிருப்பு பின்புறமும் நிறுத்தி வைத்திருப்பதால் அவ்வழியாக வந்து செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் விபத்துக்குள் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே வாகனங்களை முறையாக ஏலம் விட்டால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று எனவே வாகனங்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!