பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள்   ஆர்ப்பாட்டம்
X

எளாவூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பணி நீக்கம் செய்யப்பட்டதைக்கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையின் முன்பு கடந்த 4 நாள்களாக போராட்டம்

எளாவூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் இருந்து 4 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் சூழலில் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பொதுமக்கள் எளாவூர் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் 4 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையின் முன்பு கடந்த 4நாடுகளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தொழிற்சாலை நிர்வாகத்துடன் கோட்டாட்சியர் செல்வம், கும்மிடிபூண்டி வட்டாட்சியர் மகேஷ் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில், தொழிற்சாலையில் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து தொழிலாளர்களின் குடும்பத்தினருடன் இந்த தொழிற்சாலையின் போக்கைக் கண்டித்து கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் கருப்புக் கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமூக ஆர்வலர் எஸ்.டி.கே.சங்கர் தலைமை வகித்தார். கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர் கேசவன் வழக்கறிஞர்கள் எஸ்.முருகதாஸ் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் எளாவூரில் உள்ள இரும்பு தொழிற்சாலை தொடர்ந்து தொழிலாளிகளை பழிவாங்கும் நோக்கில் ஈடுபட்டு வருவதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து பின்பு தொழிலாளர்களின் போராட்டத்தின் காரணமாக மீண்டும் அவர்களை பணியில் அமர்த்தியது.

தற்போது மீண்டும் தொழிலாளர்களை தொழிற்சாலை நிர்வாகம் பணி நீக்கம் செய்யும் போக்கில் ஈடுபட்டு வருவதாக கூறி தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் .தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ் மற்றும் ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளர் அய்யனாரப்பன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தி கோட்டாட்சியர் செல்வம் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என்றும் வாக்குறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமாதானம் அடைந்தனர். தொழிலாளர்கள் மீண்டும் பணியமர்த்தப் படாவிட்டால் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதி கிராம மக்களை ஒருங்கிணைத்து பெரிய அளவில் மேற்கண்ட தொழிற்சாலையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர். மேற்கண்ட தொழிற்சாலை முன்பு கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தொழிலாளிகள் அங்கேயே காலை மாலை இரவு அங்கேயே உணவு சமைத்து உண்டு, அங்கேயே இரவு தூங்கி, தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்




Tags

Next Story