புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை
8 ஆண்டாக மூடிக்கிடக்கும் அங்கன்வாடி மைய புதிய கட்டிடம்.
பெரியபாளையத்தில் புதிய கட்டிடம் கட்டி 8 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் இருப்பதால் பழைய கட்டிடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையத்தை புதிய கட்டிடத்திற்கு மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சி தர்மராஜா கோவில் அருகே பழைய அங்கன்வாடி கட்டிடம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த கட்டிடம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். இங்கு சுமார் 30 குழந்தைகள் படித்து வரும் நிலையில் இந்தக் கட்டிடமானது மிகவும் பழுதடைந்து மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்தும் சுற்றுச்சூழல் ஆங்காங்கு விரிசல்கள் ஏற்பட்டும் மழைக்காலங்களில் கட்டிடத்திற்குள் மழை நீர் கசிந்து குழந்தைகளுக்கு சமையலுக்கு அரசு வழங்கும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் நனைந்து வீணாகிறது.
இதற்கு பதிலாக வசந்த் நகர் பகுதியில் 2014-15 ம் ஆண்டில் அன்றைய கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் சி. எச். சேகர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டி 8ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை திறக்கப்படாமல் மூடி கிடக்கிறது. உடனடியாக பழைய பழுதடைந்த கட்டிடத்தை காலி செய்துவிட்டு புதிய கட்டிடத்தில் இந்த அங்கன்வாடி மையம் செயல்பட வேண்டும் என்றும் புதிய கட்டிடம் கட்டியும் செயல்படாமல் மூடி இருப்பதால் அரசு பணம் வீணாகிறது. எனவே உடனடியாக இந்த கட்டிடத்தை திறந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று குழந்தைகள் பெற்றோர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu