பூவலம்பேடு: தீ விபத்திற்கு நிவாரண உதவி வழங்கிய எம்.எல்.ஏ

பூவலம்பேடு:  தீ விபத்திற்கு நிவாரண உதவி வழங்கிய எம்.எல்.ஏ
X
பூவலம்பேடு கிராமத்தில் குடிசை தீயில் எரிந்து நாசம்; குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிய எம்.எல்.ஏ டி.ஜே. கோவிந்தராஜன்.

கும்மிடிப்பூண்டி அருகே பூவலம்பேடு கிராமத்தில் குடிசை தீயில் எரிந்து நாசம்; குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிய எம்.எல்.ஏ டி.ஜே. கோவிந்தராஜன்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏசு. கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரவு எதிர்பாராத விதமாக குடிசை வீடு தீப்பற்றி எரிந்து பொருட்கள் நாசமானது. இதை அறிந்த கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன், வட்டாட்சியர் மகேஷ், ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடாசலபதி ஆகியோர் நேற்று, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிவாரண பொருட்களை வழங்கினர். அவருடன் கட்சி நிர்வாகிகளும் அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி