பெரியபாளையத்தில் குடிநீர் குழாய் உடைப்பு.. குடிநீர் வீணாகும் அவலம்...

பெரியபாளையத்தில் குடிநீர் குழாய் உடைப்பு.. குடிநீர் வீணாகும் அவலம்...
X

பெரியபாளையம் ஊராட்சியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் வீணாக சாலையோரத்தில் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பெரியபாளையம் ஊராட்சியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் வீணாக சாலையோரத்தில் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அதனை அடுத்துள்ள பெரியபாளையம் ஊராட்சி கலைஞர் நகர் பகுதியில் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அங்கு காவலர் குடியிருப்பு பகுதியின் பின்புறம் உள்ள மேம்பாலம் அருகில், குடிநீர் மேல்நிலை தொட்டியில் இருந்து தெரு குழாய்களுக்கு தண்ணீர் கொண்டுச் செல்லும் பைப்லைன் உள்ளது.

ஊராட்சிக்கு சொந்தமாந அந்த பைப்லைன் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடி தண்ணீர் சாலையில் வீணாக பாய்ந்து வருகிறது. குடிநீர் வீணாகி வருவது குறித்து கலைஞர் நகர் பகுதி மக்கள் அந்தப் பகுதியில் உள்ள பம்ப் ஆப்ரேட்டருக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தற்போது வரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் மேம்பாலத்தின் மீது சாலையில் பாய்ந்து வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வீணாக சாலையில் செல்லும் தண்ணீரின் மேல் பகுதியில் பாசி படிந்துள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் வழுக்கி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தண்ணீர் விணாகி வரும் விவகாரத்தில் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும் என்றும் மக்களுக்கு பயன்படக் கூடிய தண்ணீர் வீணாகுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கலைஞர் நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!