முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் பேசிய முதலமைச்சர்..!

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம்  பேசிய முதலமைச்சர்..!
X

முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் வீடியோ அழைப்பில் பேசிய முதலமைச்சர் மு க. ஸ்டாலின்.

கும்மிடிப்பூண்டி நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் வீடியோ அழைப்பில் பேசி நிலைமையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

கும்மிடிப்பூண்டி அருகே நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் முதலமைச்சர் வீடியோ அழைப்பில் பேசி அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

வடகிழக்கு பருவமழை துவங்கிய முதல் நாளே மிக தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு 2நாட்கள் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மெதிப்பாளையம் கிராமத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மீனவ மக்கள் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் செல்போன் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ அழைப்பில் பேசினார். அப்போது அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் குறித்து ஆட்சியரிடம் கேட்டறிந்தார்.

எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் கும்மிடிப்பூண்டி அருகே மெதிப்பாளையம் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பெண் ஒருவரிடம் கலந்துரையாடி அங்கு வழங்கப்பட்டு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.அப்போது அமைச்சர் ஆவடி சாமு. நாசர், சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் உடனிருந்தார்.

Tags

Next Story