/* */

ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி புதிய கம்பம் அமைக்க மக்கள் கோரிக்கை.

இப்பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்யப்பட்டது என கூறப்படுகிறது

HIGHLIGHTS

ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி புதிய கம்பம் அமைக்க  மக்கள் கோரிக்கை.
X

பெரியபாளையம் அருகே சரிந்து முறியும் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம் 

பெரியபாளையம் அருகே முறிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி புதிய கம்பத்தை, அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் குமாரபேட்டை ஊராட்சியில் சுமார் 5,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பெரியபாளையம்-ஆரணி இடையே ராள்ளபாடி அஞ்சாத அம்மன் கோவில் அருகே சாலை ஓரம் ஏரி ஒன்று உள்ளது. இப்பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட சிமெண்ட் மின் கம்பம் ஒன்று உள்ளது.

தற்போது கம்பம் மிகவும் பழுதடைந்து அதன் சிமெண்ட் கான்கிரீட்டுகள் உதிர்த்து, அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி எலும்பு கூண்டு போல் ஆபத்தான நிலையில் உள்ளது. இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் மற்றும் புதுவாயிலிருந்து ஆரணி, பெரியபாளையம், திருவள்ளூர், ஆவடி, ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, வெங்கல், தாமரைப்பாக்கம், வடமதுரை, செங்குன்றம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நாள்தோறும் பேருந்துகள், லாரி, ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை செல்கின்றன,

அதிகாலையில் ராள்ளபாடி, குமார பேட்டை, ஆரணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் உடற்பயிற்சி மற்றும், நடைப்பயிற்சியிலும் ஈடுபட்டு வருவார்கள். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள பழுதடைந்த மின் கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து கீழே விழுந்தால் இவ்வழியில் செல்லும் வாகனங்களோ அல்லது பொது மக்களோ பெரிய பாதிப்பை சந்திக்கும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது.

இது குறித்து பகுதி மக்கள் கூறுகையில் அஞ்சாத்தம்மன் கோவில் அருகே ஏரிக்கரை பகுதியில் உள்ள பழுதடைந்த மின் கம்பம் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகவும். இது போன்ற கம்பங்கள் ஊராட்சியில் பல இடங்களில் உள்ளதாகவும். இவைகளை மாற்றி புதிய கம்பங்களை நடவு செய்ய சம்பந்தப்பட்ட மின்வாரிய துறையினருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும். எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும். எனவே மக்களின் நலனை கருதி இது போன்ற கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் கண்டறிந்து, அவைகளை மாற்றி புதிய கம்பங்களை அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்




Updated On: 21 March 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்