டி.ஜெ.எஸ் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
டி.ஜெ.எஸ் பள்ளியில் விஜயதசமி முன்னிட்டு நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி
கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயல் டி.ஜெ.எஸ் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்ப விழா. மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளி மற்றும் டி.ஜெ.எஸ் பப்ளிக் பள்ளி சார்பில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்ப விழா விமரிசையாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு டி.ஜெ.எஸ் கல்விக்குழுமங்களின் தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்.எல்.ஏ நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பப்ளிக் பள்ளி தாளாளர் ஜி.தமிழரசன், மெட்ரிக் பள்ளி தாளாளர் டாக்டர் ஏ.பழனி முன்னிலை வகித்தனர். முதல் நிகழ்வாக நடைபெற்ற தமிழர்களின் பாரம்பரிய கலையான பரதநாட்டியம், உள்ளிட்ட விதவிதமான நடனங்கள் அடங்கிய கலைநிகழ்ச்சிகளை மாணவ, மாணவிகள் ஆடி அசத்தலான திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.
தொடர்ந்து அற்புதமான யோகக்கலையை மாணவர்கள் அசத்தலாக செய்து காட்டி அனைவரையும் பிரமிப்பூட்டினர். இதை தொடர்ந்து விழாவின் சிறப்பம்சமாக மழலை செல்வங்களுக்கு அவரவர் பெற்றோர்கள் கைவிரலை பிடித்து பச்சரிசியில் அ ஆ எழுத வைத்து ஆரம்ப கல்வியை துவக்கி வைத்தனர்.
வெகுவிமரிசையாக நடைபெற்ற இவ்விழாவில் நிர்வாக இயக்குனர் டி.ஜெ.ஆறுமுகம், துணைத்தலைவர் டி.ஜெ.தேசமுத்து, இயக்குனர்கள் டி.தினேஷ், ஏ.கபிலன், ஏ.விஜயகுமார், பள்ளி முதல்வர்கள் ஞானபிரகாசம், அசோக், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu