முக்கரம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம்: கிராம மக்கள் கோரிக்கை

முக்கரம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்துக்கு  புதிய கட்டிடம்: கிராம மக்கள் கோரிக்கை
X

ஊத்துக்கோட்டை அருகே முகரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பழுதடைந்த ஆபத்தான ஊராட்சி மன்ற கட்டிடம்

பலமுறை கோரிக்கை வைத்தும் செவி சாய்க்காத ஒன்றிய மாவட்ட நிர்வாகம் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு.

ஊத்துக்கோட்டை அருகே முக்கரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பழுதடைந்த ஆபத்தான ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர மக்கள் கோரிக்கை பலமுறை கோரிக்கை வைத்து செவி சாய்க்காத ஒன்றிய மாவட்ட நிர்வாகம் என்று கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முக்கரம்பாக்கம் ஊராட்சியில் சுமார் 3000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் ஊராட்சி சேர்ந்த மக்கள் வீட்டு வரி, குடிநீர் வரி,சொத்து வரி, உன்கிட்ட வரிகளை செலுத்தவும். கிராமத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இருக்கின்ற குறைகளை குறித்துl எடுத்துக் கூற ஊராட்சி பிரதிநிதிகள் இடம் முறையிட அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று வருவார்கள்.

இந்த நிலையில் இந்த ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடமானது சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் ஆகும் இந்தக் கட்டிடத்தில் மேற்கூரை பழுதடைந்து. அதில் உள்ள சிமெண்ட் கான்கிரீட்டுகள் பெயர்ந்து உதிர்ந்து கீழே விழுவதோடு அதில் உள்ள கம்பிகள் துரும்பிடித்து எலும்பு கூண்டு போல் காட்சி அளித்து வருகிறது. மேலும் ஊராட்சியில் முக்கிய கோப்புகளும் மாயா காலங்களில் மழைநீர் கசிந்து அதில் கோப்புகள் நனைந்து வீணாகிறது.

இதனால் இந்த பழுதடைந்த கட்டிடத்திலிருந்து ஊராட்சி நிர்வாகம் தற்காலிகமாக அருகில் உள்ள இ சேவை மைய கட்டிடத்தில் ஓராண்டு காலமாக இயங்கி வருகிறது. இந்தக் கட்டடத்தை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்களும் ஊராட்சி நிர்வாகமும் பலமுறை சம்பந்தப்பட்ட கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தும். எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட ஒன்றிய மாவட்ட நிர்வாகம் பலதடந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முக்கரம்பாக்கம் கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் ஊராட்சி நிர்வாகம் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்..

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!