வீட்டுமனை பட்டா வழங்க நிலத்தில் குடியேறும் போராட்டம்..!

வீட்டுமனை பட்டா வழங்க நிலத்தில் குடியேறும் போராட்டம்..!
X

நிலத்தில் குடியேறும் போராட்டம் 

கும்மிடிப்பூண்டி அருகே இலவசம் வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைமையில் நிலத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற நிலத்தில் குடியேறும் போராட்டத்தில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம்.நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த செதில்பாக்கத்தில் சுமார் 250 தலித் குடியிருப்புகள் உள்ளன.இதில் பல குடும்பங்கள் ஒரே வீட்டில் பல குடும்பங்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். இதனால் வீட்டுமனை இல்லாத தகுதி உடைய நபர்களுக்கு ஊராட்சியில் உள்ள அரசு நிலத்தில் இலவச வீட்டுமனை வழங்குமாறு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வருவாய் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கோரிக்கை மனுவின் மீது வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக விவசாயிகள் சங்க அகில இந்திய துணைத் தலைவர் சண்முகம் தலைமையில் காலியாக உள்ள அரசு நிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சிறைபிடிக்கப்பட்டனர்.அவர்கள் அரசு பேருந்தில் அழைத்துவரப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு மாதத்திற்குள் தகுதி உடையவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

வாக்குறுதி நிறைவேற்றப்படாத பட்சத்தில் மீண்டும் போராட்டம் தொடரும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகளும் அப்பகுதி மக்களும் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
why is ai important to the future