ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தனியார் தொழிற்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய கோபாலபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள இரு வேறு தனியார் தொழிற்சாலைகளில் நீர் நிலையாக குறிப்புகள் மற்றும் அரசு நில ஆக்கிரமிப்புகள் உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் சார்பாக பலமுறை புகார் அளித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தப்பட்டு வந்தது. மேலும் நீதிமன்றத்தில் இது தொடர்பாக பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றமும் உத்தரவிட்டது
ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி புகார்களும் எழுந்தது. இந்த நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் இரா.ஏழுமலை, வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் இர.கோகுல், திருவள்ளூர் (கி) மாவட்ட செயலாளர் வினோத்,திருவள்ளூர் (வ) மாவட்டப் பொருளாளர் புலிவேந்தன் சுரேசு, கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர் இர.கார்த்திக், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் மணலி இடிமுரசு ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu