ஊத்துக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டம்..!

ஊத்துக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டம்..!
X

கூட்டத்தில் பேசும் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் குமரவேல்.

ஊத்துக்கோட்டையில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தலைமை தாங்கினார்.

பேரூராட்சி துணைத்தலைவர் குமரவேல், செயல் அலுவலர் சதீஷ் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் சத்தியவேடு சாலையில் மழைநீர் கால்வாய் அமைத்தல் , செஞ்சுலட்சுமிநகரில் சிமெண்ட் சாலை சீரமைத்தல், மாதா கோயில் தெருவில் மழைநீர் கால்வாய் கட்டுதல், குயவன் குளம் பகுதியில் பேவர் பிளாக் நடைபாதை அமைத்தல், இசிஐ சர்ச் தெருவில் சிமெண்ட் சாலை அமைத்தல், மாதா மண்டபம் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல்,

ஆண்கள் மற்றும் பெண்கள்மேல்நிலைப்பள்ளி முன்பு மழை நீர் கால்வாய் அமைத்தல், அம்பேத்கர் நகர் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் என பல்வேறு பணிகள் செய்ய ரூ. 1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் செய்வது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவுன்சிலர்கள் சமீமா, இந்துமதி, அபிராமி, கோபி கிருஷ்ணா, ஆனந்தி, திரிபுரசுந்தரி, மணிகண்டன், அபத்தா பேகம், ஜீவா,அருணாச்சலம், சுமலதா, கல்பனா, வெங்கடேசன், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!