சிப்காட் துணை மின் நிலையத்தில் மின் மாற்றியை பயன்பாட்டிற்கு திறந்து வைத்த எம்எல்ஏ

சிப்காட் துணை மின் நிலையத்தில்  மின் மாற்றியை பயன்பாட்டிற்கு  திறந்து  வைத்த எம்எல்ஏ
X

சிப்காட் துணை மின் நிலையத்தில் மின்மாற்றியை எம்எல்ஏ கோவிந்தராஜன் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 25மெகாவாட் திறன் கொண்ட மின்மாற்றியை பயன்பாட்டிற்காக எம்எல்ஏ கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் துணை மின் நிலையம் எண்.1ல் 25மெகாவாட் திறன் கொண்ட மின் மாற்றியை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் துவக்கி வைத்தார்.

கும்மிடிப்பூண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் மின் தட்டுப்பாட்டை தவிர்க்க உற்பத்தியை பெருக்கும் வகையில், இந்த மின்மாற்றியின் செயல்பாடு இருக்கும் என மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!