பெரியபாளையம் அருகே ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைப்பு
![பெரியபாளையம் அருகே ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைப்பு பெரியபாளையம் அருகே ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைப்பு](https://www.nativenews.in/h-upload/2022/09/20/1594120-img-20220920-wa0057.webp)
ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து வைக்கும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் திருக்கண்டலம் ஊராட்சியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை வகித்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சத்திய வேலு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ஸ்டாலின், ஒன்றிய குழு உறுப்பினர் ரவி,ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் லிங்கதுரை, நிகழ்ச்சியில் முன்னதாக அனைவரையும் ஊராட்சி மன்ற தலைவர் மதன் சத்யராஜ் அனைவரையும் வரவேற்றார்.
இதில் நிர்வாகிகள் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தேவேந்திரன், அவைத்தலைவர் டி.கே. முனிவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன், வெங்கடாசலம், மற்றும் வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலர் ரமேஷ் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu