பெரியபாளையம் போலியோ சொட்டு மருந்து முகாம்: எம்எல்ஏ கோவிந்தராஜன் பங்கேற்பு

பெரியபாளையம் போலியோ சொட்டு மருந்து முகாம்: எம்எல்ஏ கோவிந்தராஜன் பங்கேற்பு
X

குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் எம்எல்ஏ கோவிந்தராஜன் 

பெரியபாளையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் எம்எல்ஏ கோவிந்தராஜன் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி எல்லாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜே கோவிந்தராஜன் கலந்து கொண்டு பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார்.

இதில் வட்டார மருத்துவ சுகாதார மேற்பார்வையாளர் ஜெகநாதன், சுகாதார ஆய்வாளர் நித்தியானந்தம், எல்லாபுரம் பகுதி திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!