ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு
X

பைல் படம்

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி கள்ளச் சந்தைக்காரர் தடுப்பு காவல் சட்டத்தின் படி கைது செய்து சிறையிலடைத்தனர்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஒபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழக பொது விநியோக திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்கும் பொருட்டு, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை, கூடுதல் காவல்துறை இயக்குநர் அருண் உத்தரவுப்படி, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை, காவல் கண்காணிப்பாளர் கீதா மேற்பார்வையில் போலீசார் சோதனை மேற்கொண்டதில், சுமார் 4000 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வசந்தகுமார், முத்து மற்றும் குமார் ஆகியோர் கடந்த 19.ஆம் தேதி கைது செய்து திருவள்ளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் தொடர் கடத்தலில் ஈடுபட்ட, கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஒபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் (38) என்பவர் மீது திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி கள்ளச் சந்தைக்காரர் தடுப்பு காவல் சட்ட (குண்டாஸ்) த்தில் கைது செய்து சிறையிலடைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.




Tags

Next Story
ai solutions for small business