கும்மிடிப்பூண்டி அருகே இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

கும்மிடிப்பூண்டி அருகே இரண்டு கடைகளில்  பூட்டை உடைத்து பணம் கொள்ளை
X

கொள்ளையடிக்கப்பட்ட கடை.

கொள்ளையடித்த மர்ம நபர்கள் கடையில் இருந்த டம்ளரை எடுத்துச் சென்று கடையின் பின்புறம் சாவகாசமாக மது அருந்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பாதிரிவேடு காவல் நிலையத்திற்குட்பட்ட பூவளம்பேடு, கே.எஸ்.சாலையில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே வங்கி, தங்க நகை கடை, செல்போன் கடை உட்பட முப்பதுக்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதிக்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் மாங்கிலால் எனப்படும் நகை அடகு மற்றும் விற்பனை கடையின் பூட்டை உடைத்து கள்ளப்பட்டியில் இருந்த 10,000 ரூபாயை திருடி உள்ளனர். மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்றனர்.

அதேபோல் SSS பேன்சி ஸ்டோரின் பூட்டை உடைத்து கடையில் இருந்த 15,000 ரூபாயையும் கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் அருகாமையில் இருந்த இரண்டு மளிகை கடைகளில் இரும்பு கதவுகளை உடைத்த மர்ம ஆசாமிகள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து கொள்ளையடித்த மர்ம நபர்கள் கடையில் இருந்த டம்ளரை எடுத்துச் சென்று கடையின் பின்புறம் சாவகாசமாக மது அருந்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாதிரிவேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து, மோப்பநாய் உதவியுடன் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags

Next Story
ai marketing future