சிறப்பாக பணியாற்றிய டாக்டருக்கு விருது

சிறப்பாக பணியாற்றிய டாக்டருக்கு விருது
X

கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் சிறப்பாக பணி செய்தமைக்காக டாக்டர்.கோவிந்தராஜுக்கு லயன்ஸ் கிளப் சார்பில் பாராட்டு மற்றும் விருது வழங்கப்பட்டது.

மருத்துவப் பணியில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர் கோவிந்தராஜ னுக்கு லயன்ஸ் கிளப் சார்பில் விருது வழங்கப்பட்டது

கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் சிறப்பாக பணி செய்தமைக்காக டாக்டர்.கோவிந்தராஜுக்கு லயன்ஸ் கிளப் சார்பில் பாராட்டு மற்றும் விருது வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டியில் வட்டார மருத்துவ அலுவலராக பணி செய்து வந்தவர் டாக்டர். கோவிந்தராஜ். இவர் கொரோனா தொற்று பரவிய காலகட்டத்தில் மிகவும் துணிச்சலாக தொற்று நோய் பணிகளை எதிர்கொண்டு குறைவான பணியாளர்களை வைத்து நிறைவாக பணி செய்து கொரோனாதொற்று நோய் பணிகளை மேற்கொண்டு கும்மிடிப்பூண்டி பகுதி மக்களிடையே பெரும் அளவில் பாராட்டுகளை பெற்றவராவார்.

மேலும் சமுதாய நல்நோக்கத்தோடு பணியாற்றி மரணங்களை தடுக்கும் விதத்தில் பல்வேறு உயிர்களை காத்தார். மேலும் சமீபத்தில் ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தில் பல பேர் உயர்ந்த நேரத்தில் தன் மக்களுக்கு உதவ வேண்டும் என நல்லா நோக்கத்தில் ஒடிசாவுக்கு நேரில் சென்று விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தன்னால் முடிந்த மருத்துவ சேவையும் செய்தார்.

இதனை பாராட்டும் வகையில் உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு டாக்டர் கோவிந்தராஜுக்கு லயன்ஸ் கிளப் சார்பில் பாராட்டு விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் அவருக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்கினர். இதேபோன்று சிறப்பாக பணியாற்றிய டாக்டர் சுதர்சன் என்பவருக்கும் விருதுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.




Tags

Next Story
ai solutions for small business