பெரியபாளையத்தில் அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் சார்பில் மரியாதை

பெரியபாளையத்தில் அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள்  சார்பில்  மரியாதை
X

பெரியபாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு டேனி கிங்பால் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பஜார் பகுதி கடை வியாபாரிகளுக்கும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கும். இனிப்பு, உணவு உள்ளிட்டவை வழங்கினார்.

டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பெரியபாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு டேனி கிங்பால் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 133 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து விமரிசையாக கொண்டாடி அவர் அவர்களால் முடிந்த ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் டேனி கிங்பால் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பஜார் பகுதியில் உள்ள கடை வியாபாரிகளுக்கும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கும். இனிப்பு, உணவு உள்ளிட்டவை வழங்கினார். இதில், கும்மிடிப்பூண்டி தொகுதி துணை பொறுப்பாளர் ராள்ளபாடி பாபு, வழக்கறிஞர் நாகராஜன், வேலுமயில், சந்தீப், ராபர்ட், சுபாஷ், கருணா, மணிவளவன் ஆகியோர் உட்பட பலர் உடன் இருந்தனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!