கும்மிடிப்பூண்டி அருகே பெண் கவுன்சிலர் கடத்தல்:குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

கும்மிடிப்பூண்டி அருகே  பெண் கவுன்சிலர்  கடத்தல்:குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்
X

பைல் படம்

கும்மிடிப்பூண்டி அருகே மகனுடன் பெண் கவுன்சிலர் கடத்திய வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் சரணடைந்தார்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா ஊராட்சியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ரமேஷ் குமார். இவர் அதிமுக திருவள்ளூர் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.இவரது மனைவி ரோஜா கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ஒன்றாவது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 24 -ஆம் தேதி ரமேஷ் குமார் வெளியே சென்றபோது அவரது மனைவி ஒன்றிய கவுன்சிலர் ரோஜா மற்றும் அவருடைய மகன் ஜேக்கப் ஆகியோர் இருவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டில் நுழைந்து ரோஜா மற்றும் அவரது மகன் ஜேக்கப் ஆகியோரை துப்பாக்கி முனையில் ஒன்றிய கவுன்சிலர் வீட்டில் நின்று கொண்டிருந்த ரமேஷ் குமார் காரில் வைத்து கடத்திச் சென்றனர்.

இந்தத் தகவலை அறிந்த ரமேஷ் குமார், காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே கடத்தப்பட்ட அன்று இரவே ரோஜா மட்டும் அவரது மகன் வீடு திரும்பினார் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்லவாடா பகுதியைச் சேர்ந்த சுரேந்தர், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பாஸ்கர், நவீன் கும்புலி பகுதியை சேர்ந்த சந்தோஷ், ஆகியோர் கடத்தலில் ஈடுபட்டதை விசாரணை தெரிவித்தனர். இதையடுச்சு கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து விசாரணை நடத்திய போது சுரேந்தர் என்பவரிடம் விசாரித்த போது அதிமுக பிரமுகர் ரமேஷ் குமார் தனது விவசாய நிலத்தை அபகரிக்கும் வகையில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறினர். இதனால் அவரை பழிவாங்கும் வகையில், வீட்டில் ஆளில்லாத நேரம் பார்த்து உள்ளே புகுந்து ஒன்றிய கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகனை கடத்திச் சென்றதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து, நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் தலை மறைவாக இருந்த ஐந்தாவது குற்றவாளியான ஆந்திர மாநிலம் வரதய பாளையம் சேர்ந்த சந்திரசேகர், பொன்னேரி நீதிமன்றத்தில் சரணடைந்தார் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்..


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!