கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டம்

கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை கூட்டம்
X
எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்த அக்கரப்பாக்கம்-திருக்கண்டலம் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் தெருமுனை பிரச்சார கூட்டம் மற்றும் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிகளுக்கு, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.சத்தியவேலு தலைமை வகித்தார். பி.வெங்கடாஜலபதி, ஏ.தேவேந்திரன், டி.கே.முனிவேல், கே.வி.வெங்கடாசலம், இ.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், திமுக பிரசார குழு செயலாளரும், தலைமை கழக பேச்சாளருமான சேலம் சுஜாதா, மாநில அயலாக அணி துணைச் செயலாளர் ஜி.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு கலைஞரின் நூற்றாண்டு விழாவை தமிழக மக்கள் கொண்டாட அவர் கொண்டு வந்த திட்டங்களே என்று பேசினர். பின்னர், திருக்கண்டலம் கிராமத்தில் 500 பெண்களுக்கு எவர்சில்வர் தூக்கு, அக்கரப்பாக்கம் கிராமத்தில் 500 பெண்களுக்கு சேலையும் என மொத்தம் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிர்வாகிகள் எம்.முனிநாதன், அக்கரை ஆர்.ரஞ்சித், எஸ்.சந்திரசேகரன், எஸ்.கோட்டையன், நளினி மணிகண்டன், கே.எஸ்.குப்பன், பி.மதன் என்ற சத்யராஜ், ஜி.தியாகராஜன், எம்.கே.ஆனந்தன், கே.லிங்கதுரை ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். முடிவில், சி.தினேஷ்குமார்,எஸ்.சாம்கமலேசன், கொள்கை டி,பாபு, சுரேஷ் என்ற சீனு மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் எம்.செந்தமிழ்ரசன் வரவேற்றார்.ஏ.இளைரசு நன்றி கூறினர்.






Tags

Next Story
ai solutions for small business