கருணாநிதி பிறந்த கொண்டாட்டம்: பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி.

கருணாநிதி பிறந்த கொண்டாட்டம்: பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி.
X

கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது

பெரியபாளையத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் மூர்த்தி இனிப்பு மற்றும் மதிய உணவை வழங்கினார்.

பெரியபாளையத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி மதிய உணவை ஒன்றிய செயலாளர் மூர்த்தி வழங்கினார்.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பெரியபாளையம், தண்டு மாநகர். உள்ளிட்ட பகுதிகளில் திமுக கொடியை தலைமை செயற்குழு உறுப்பினரும் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.ஜே.மூர்த்தி ஏற்றி வைத்தார்.

கட்சி கொடிகளை ஏற்றி வைத்து பின்னர் பெரியபாளையம் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்ட கலைஞர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் 1000. பேருக்கு மதியம் உணவாக அறுசுவை பிரியாணி வழங்கப்பட்டது.

பின்னர் அரசு மருத்துவமனையில் மருத்துவமனை ஊழியர்களுக்கு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன், மாவட்ட வர்த்தக அணி சேர்ந்த தனசேகரன், மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், பீடா சம்பத், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சங்கர், துணை அமைப்பாளர் வடமதுரை அப்புன், முன்னாள் பெரியபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, நிர்வாகிகள் ஐ. ராஜா, கௌதமன் , ஆகியோர் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
is ai the future of computer science