மருத்துவமனையில் இரவு நேர மருத்துவர் நியமிக்க கோரிக்கை

மருத்துவமனையில் இரவு நேர மருத்துவர் நியமிக்க கோரிக்கை
X
கும்மிடிப்பூண்டி அருகே கண்ணன் கோட்டை அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவர் நியமனம் செய்ய வேண்டுமென வலியுறுத்தல்

கண்ணன் கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவர் நியமனம் மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறவேற்றித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கண்ணன்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினந்தோறும் தேர்வாய், கரடிபுத்தூர், கொல்லானூர், சிறுவாடா, பாஞ்சாலை, அமரம்பேடு மேற்பட்ட10.க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு வந்து சர்க்கரை நோய், காய்ச்சல், சளி, நாய் கடி, பெண்கள் மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்காக இந்த மருத்துவமனையை நாடி சிகிச்சை பெற்று வந்து செல்கின்றனர்.

இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகல் நேரப் பணியில் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் ஒரு மருந்தாளுனர் ஒரு தூய்மை பணியாளர் மட்டுமே வேலை பார்த்து வருகிறார். ஆனால் இரவு நேர பணியின் போது மருத்துவர் இல்லை. இதற்கு பதிலாக ஒருசெவிலியர் ,ஒரு தூய்மை பணியாளர் மட்டுமே பணிபுரிந்து வருவதால் இரவு நேரங்களில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டு வருவதாக மக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மிக விரைவில் இரவு நேர பணியின் போது தவறாமல் ஒரு மருத்துவரை பணியில் அமர்த்த வேண்டும்

இது மட்டுமில்லாமல் இந்த மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் விஷப் பாம்புகளும், போதை ஆசாமிகளும் உள்ளே வருவதால் நோயாளிகளும் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே இந்த மருத்துவமனைக்கு சுற்றுச் சுவர் அமைத்து மின் விளக்குகள் அமைத்து தர வேண்டும் என மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!