தேர்வழி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

தேர்வழி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமினை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வழி ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் கிரிஜா குமார் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் அமலா சரோன் ஆகியோர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று இன்று தேர்வழி ஊராட்சியில் கொரோன தடுப்பூசி முகாமினை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் தொடங்கி வைத்தார். அவருடன் காவல்துறை கண்காணிப்பாளர் ரமேஷ், வட்டார மருத்துவர் கோவிந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர். இந்நிகழ்வு தேர்வழி ஊராட்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu