கும்மிடிப்பூண்டி: சூரப்பூண்டி சந்திப்பில் கஞ்சா கடத்திய இருவர் கைது; 14 கிலோ கஞ்சா பறிமுதல்!

கும்மிடிப்பூண்டி: சூரப்பூண்டி சந்திப்பில்  கஞ்சா கடத்திய இருவர் கைது; 14 கிலோ கஞ்சா பறிமுதல்!
X
கஞ்சா கோப்பு படம்
பாதிரிவேடு அருகே உள்ள சூரப்பூண்டி சந்திப்பில் வாகன சோதனையின் போது கஞ்சா கடத்திய 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள சூரப்பூண்டி சந்திப்பில் சப்இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் பாதிரிவேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்னை நோக்கிச் சென்ற சந்தேகத்துக்கு இடமான ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். போலீசார் சோதனையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்களிடம் ஒரு பையில் மொத்தம் 14 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆந்திரா மாநிலம் சத்தியவேடிலிருந்து செங்குன்றத்திற்கு கஞ்சா கடத்த முயன்றதாக செங்குன்றத்தை சேர்ந்த கார்த்திக் (24) மற்றும் பிரகாஷ் (26) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 14கிலோ கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்