கும்மிடிப்பூண்டியில் பொங்கல் கொண்டாட்டம்.. பழங்குடியின பெண்களுக்கு புத்தாடை வழங்கல்...
கும்மிடிப்பூண்டியில் பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பழங்குடியின மக்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கவரப்பேட்டையில் இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளை இயங்கி வருகிறது. அந்த அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் நளினி மாயா தலைமையில், நிர்வாக இயக்குநர் பிரியா ஏற்பாட்டில், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள எலாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட தலையாரிப்பாலையம் கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.
அந்த கிராமத்தில் 36 பழங்குடி இனத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த குடும்பங்களைச் சேர்ந்த 36பெண்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு தாய் வீட்டு சீதனமாக புடவை, மஞ்சள், குங்குமம், பழம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் நளினி மாயா புத்தாடை உள்லிட்ட உதவிகளை வழங்கினார்.
அந்தப் பொருட்களை பெற்றுக் கொண்ட பழங்குடியின பெண்கள் நளினி மாயாவிற்கு தாங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். நிகழ்ச்சியில், அறக்கட்டளையின் நிர்வாகிகள் ராஜகோபால் சுவாமி ரகு, காமராஜ், தேவராஜ், நாகராஜ், குமரன், ஏழுமலை, நந்தகுமார், ஜெய்சங்கர், தேவதாஸ், கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய குடிமக்கள் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் நளினி மாயா கடந்த 32 ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் தடா என்கின்ற பகுதியில் துல்காத் அம்மன் ஆலயம் ஒன்றை நிறுவி அதன் மூலமாக பல்வேறு சேவைகளையும் செய்து வருவதோடு பசியால் வாடும் ஏழை மக்களுக்கும் ஒவ்வொரு பௌர்ணமி அன்று ஆலயத்தில் சிறப்பு பூஜையோடு 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் சேவைகளை செய்து வருகின்றார்.
அதன் தொடர்ச்சியாக, தற்போது இந்திய குடிமக்கள் அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்று அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும், விதவை தாய்மார்கள், முதியோர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு உதவிகளையும் செய்து வருகின்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu