கும்மிடிப்பூண்டி: வீட்டின் அருகே மது பாட்டில்கள் பதுக்கல்: கூலித் தொழிலாளி கைது!

கும்மிடிப்பூண்டி: வீட்டின் அருகே  மது பாட்டில்கள் பதுக்கல்: கூலித் தொழிலாளி கைது!
X
கும்மிடிப்பூண்டி பார்த்தபாளையம் கிராமத்தில் வீட்டின் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்த கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் அடுத்த பாத்தபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்தானம் (37) கூலித்தொழிலாளி.

இவர் வீட்டின் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி அங்கு சென்ற போலீசார், அவரது வீட்டின் அருகே உள்ள மர புதரில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 40 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் நீலகண்டன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலித்தொழிலாளி சந்தானத்தை கைது செய்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!