கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா கடத்திய 4 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா கடத்திய 4 பேர் கைது
X
கும்மிடிப்பூண்டி அருகே 250 கிலோ கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை போலீசாருக்கு கஞ்சா கடத்துவதாக வந்த ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கவரப்பேட்டை அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்று சந்தேகத்தின்பேரில் போலீசார் அந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 127 பார்சல் களில் மொத்தம் 250 கிலோ கஞ்சா இருப்பதாக தெரியவந்தது.

இதுதொடர்பாக காரில் பயணம் செய்த 17 வயது சிறுவன் மற்றும் கார் ஓட்டுநர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பேரயூரை சௌந்தரபாண்டியன்(23), அய்யர்(55), ஜெயக்குமார்(24) ஆகியோரை கைது செய்து கவரைப்பேட்டை போலீசார் அவர்களை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று அங்கு சிறப்பு தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!