ஈகுவார்பாளையம்:அமைச்சர் நாசர் திறந்த கொரோனா மையத்தை மக்கள் முற்றுகை!

ஈகுவார்பாளையம்:அமைச்சர் நாசர் திறந்த கொரோனா மையத்தை மக்கள் முற்றுகை!
X

ஈகுவார்பாளையத்தில் அமைச்சர் நாசர் திறந்து வைத்த கொரோனா சிகிச்சை மையத்தை முற்றுகையிட்ட மக்கள்.

ஈகுவார்பாளையத்தில் அமைச்சர் நாசர் திறந்து வைத்த கொரோனா சிகிச்சை மையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 படுக்கைகளுடன் கூடிய கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு இடைக்கால கொரோனா பாதுகாப்பு சிகிச்சை மையத்தை பால்வளத்துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்.

அப்போது மருத்துவமனை வளாகத்தின் வெளியே திரண்ட 30க்கும் மேற்பட்ட உள்ளூர் கிராம மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா வார்டு கொண்டு வந்தால் கொரோனா நோயாளிகள் பலரும் வந்து செல்வார்கள். எனவே இந்த கொரோனா சிகிச்சை மையத்தை திறக்கக்கூடாது என கோரிக்கை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கோவிந்தராஜன், இது கொரோனா சிகிச்சைக்கான ஒட்டுமொத்த மையம் கிடையாது. இது மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு முதற்கட்ட சிகிச்சை அளிப்பதற்காக துவக்கப்பட்டுள்ள சிறப்பு மையம் தான் என விளக்கம் அளித்தார்.

இதனை ஏற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story