கும்மிடிப்பூண்டி: வாகன சோதனையில் ரூ.1லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்!

கும்மிடிப்பூண்டி: வாகன சோதனையில் ரூ.1லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்!
X

மதுபானம் கடத்தி வந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்த காட்சி.

கும்மிடிப்பூண்டியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தமிழக, ஆந்திர எல்லையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி சரக போலீசார் தமிழக மாநில எல்லையில் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சரக எல்லைக்குட்பட்ட எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி மற்றும் கவரப்பேட்டை சத்தியவழி இணைப்புச் சாலை ஆகிய பகுதிகளில் போலீசார் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த வில்லிவாக்கத்தை சேர்ந்த வாசுதேவன் (52) என்பவரது சொகுசு காரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டதில்,காரில் கடத்திவரப்பட்ட உயர்ரக மது பாட்டில்கள் 10 மற்றும் சிறிய ரக மது பாட்டில்கள் 25 பிடிபட்டது.

அதேபோல் வேலூரைச் சேர்ந்த அருள்தாஸ் என்பவரிடம் இருந்து 95 மது பாட்டில்களும் கவரப்பேட்டை எ.என். குப்பத்தைச் சேர்ந்த பிரபு (37) என்பவரிடம் இருந்து 92 மதுபாட்டில்கலும் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சொகுசு கார், 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
ai marketing future