கும்மிடிப்பூண்டி: ஏலாதிமேல்பாக்கத்தில் கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது!

கும்மிடிப்பூண்டி: ஏலாதிமேல்பாக்கத்தில் கத்திமுனையில் செல்போன் பறித்த 2 பேர் கைது!
X
கும்மிடிப்பூண்டி அருகே ஏலாதிமேல்பாக்கம் பகுதியில் கத்திமுனையில் செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பலப்பம்பேடு கண்டிகை பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவர் வேலைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் ஏலாதிமேல்பாக்கம் அருகே வந்துகொண்டிருந்தார்.

அப்போது 3 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, கையில் இருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து சந்திரன் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!