பெரியபாளையம் அருகே அரசு பள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

பெரியபாளையம் அருகே அரசு பள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
X

அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் மது குடித்தது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. 

பெரியபாளையம் அருகே அரசு பள்ளியில் மது அருந்திய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே எருக்குவா ஊராட்சிக்குட்பட்ட மணலியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 7 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக சஞ்சய் காந்தி பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் மது போதையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிக்கு தினந்தோறும் தலைமைஆசிரியர் மதுகுடித்து விட்டு வருவதாக பெற்றோர் குற்றம் சாட்டி வந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் பள்ளியிலே மது அருந்துவதாக பெற்றோர்கள் பள்ளியில் குவிந்ததால் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்தனர். தொடர்ந்து மதுகுடித்து இருப்பதாக புகார் எழுந்த தலைமை ஆசிரியரின் ரத்த மாதிரிகளை சேகரித்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வு மாதிரிகள் அவர் மது அருந்துவது உறுதியானதை தொடர்ந்து தலைமையாசிரியர் சஞ்சய்காந்தியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது