அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா..!

அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா..!

பெரியபாளையம் அடுத்த ராள்ளபாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

திருவள்ளூர், ராள்ளபாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குமரப்பேட்டை ஊராட்சியில் ராள்ளபாடி காலனியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது.இப்பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெ.ஷகிலா தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் ராஜாஜி,வட்டார தலைவர் செல்வம், பொருளாளர் ஆனந்தன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் எ.சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், சிறப்பு விருந்தினர்களாக

எல்லாபுரம் வட்டார கல்வி அலுவலர்கள் சாதுசுந்தர்சிங்,கல்பனா, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சித்ராமுனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு இடையே விளையாட்டுப் போட்டி,பேச்சு போட்டி,கட்டுரை போட்டி,ஓவியப்போட்டி, ஒப்புவித்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள்,வரவேற்பு நடனம், தேசபக்தியை வலியுறுத்தும் நாடகங்கள்,ஆன்மீகத்தை போற்றும் வகையில் பக்தி நடனங்கள் உள்ளிட்டவை நடைபெற்றது.

பின்னர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,பெற்றோர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள், பெரியோர்கள்,இளைஞர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர். முடிவில்,உதவி ஆசிரியர் டி.தனலட்சுமி நன்றி கூறினார்.

Tags

Next Story