பெரியபாளையம் அருகே தந்தை கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை

பெரியபாளையம் அருகே தந்தை கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்.

பெரியபாளையம் அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி மல்லியங்குப்பம் பகுதியை சேர்ந்த விவசாயி பார்த்திபனின் 15வயது மகள் கோபிகா. இவர் ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 26ஆம் தேதி காய்ச்சல் காரணமாக ஆரணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதை கண்டறிந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாணவி கோபிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆரணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் பெரியபாளையம் கோவிலுக்கு மாணவி நடந்து சென்றதை தந்தை கண்டித்தது தெரிய வந்துள்ளது. தந்தை கண்டித்ததால் மகள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு