சென்னை- திருப்பதி சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து

சென்னை- திருப்பதி சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து
X

சென்னை - திருப்பதி  சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்.

சென்னை- திருப்பதி சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

பெரியபாளையத்தில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் சென்னை -திருப்பதி சாலையில் பெரியபாளையம் பஜார் வீதி அருகே இரவு நேரங்களில் 50.க்கும் மேற்ப்பட்ட மாடுகள் சுற்றித் திரிவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு ஒரு சில உயிர் சேதம் ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுபோன்று மாடுகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டிருந்தார். ஆனால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை முறையாக பராமரிக்காமல் அவிழ்த்து விடுவதால் சாலை ஓரங்களில் கிடைக்கும் உணவுகளை உண்டு கடைகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியும் இரவு நேரங்களில் சாலை ஆக்கிரமித்து அமர்வதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

எனவே இது குறித்து பொதுமக்களும் பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்று மாடுகளை அவிழ்த்து விடும் மாட்டின் உரிமையாளர்களின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்தி கோசாலையில் ஒப்படைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பஜார் பகுதி வியாபாரிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு