கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உணவு வழங்கிய அறக்கட்டளை

கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உணவு வழங்கிய  அறக்கட்டளை
X

அன்னை அறக்கட்டளை சார்பில் உணவு வழங்கிய காட்சி

கும்மிடிப்பூண்டியில் அன்னை அறக்கட்டளை சார்பில் கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவிர்ப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அன்னை அறக்கட்டளை சார்பில் கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள முதியவர்களுக்கும், உணவின்றி தவிர்ப்பவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள அன்னை அறக்கட்டளை சார்பில் அதன் உரிமையாளர் மேரி, தனது வாழ்வாதாரத்தை இழந்து கொரோனாவால் வாடி வரும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்.

இதனை தொடர்ந்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!