மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி : எம்.எல்.ஏ வழங்கினார்..!

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி : எம்.எல்.ஏ வழங்கினார்..!
X

மகளிர் சுய  உதவி குழுக்களுக்கு கடனுதவிகளி வழங்கிய எம்.எல்.ஏ., டி.ஜெ கோவிந்தராஜன்

மெய்யூர் ஊராட்சியில் புதிய நியாயவிலை கட்டிடத்தை திறந்து வைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவிகளை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் வழங்கினார்.

பெரியபாளையம் அருகே மெய்யூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் ராஜபாளையம் கிராமத்தில் புதிய நியாய விலை கடை தி6றப்பு விழா மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவியை கும்முடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், பெரியபாளையம் அருகே மெய்யூர் ஊராட்சிக்கு உட்பட்டது ராஜபாளையம் கிராமத்தில் மெய்யூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவியை வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா சரத் பாபு தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர் தேன்மொழி ஏழுமலை, கூட்டுறவு கடன் சங்க செயலர் ஏழுமலை ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார்.


கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் டி.கே. சந்திரசேகர், ஜான் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ. கோவிந்தராஜன் பங்கேற்று₹.9லட்சத்து.36 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ₹.1 கோடியே12 லட்சத்து 23 ஆயிரம் 600 ரூபாயை காண காசோலைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சுதாகர், பேரிட்டிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தில்லை குமார், மற்றும் நிர்வாகிகள் சரசு பூபாலன், சித்திரா பாபு, திவ்யா ராகவன், கஜேந்திரன், சீனிவாசலு, குருமூர்த்தி, நாகராஜ், வாசு, வேல்முருகன், காண்டீபன், மகளிர் சுய உதவி குழுவினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்