மண் குவாரியில் அதிக அளவு ஆழம் தோண்டு வதால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்
அக்கரப்பாக்கம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் மண் குவாரியில் அதிக அளவு ஆழம் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே அக்கரப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஊராட்சிக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் மூன்றடி ஆழமும் சவுட்டு மண் எடுப்பதற்கு தனி நபருக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இந்த மணல் குவாரியில் ஐந்துக்கும் மேற்பட்ட ஹிட்டாச்சி இயந்திரங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் சவுட்டு மண் அல்லி திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், பொன்னேரி, உள்ளிட்ட பகுதிகளில் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
இந்த நிலையில் இந்த ஏரியின் சுற்றி சுமார் 200 ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்கள் உள்ளன இப்பகுதியில் உள்ள விவசாயிகள் நெற்பயிர், பூக்கள், வெண்டைக்காய், கத்திரிக்காய் உள்ளிட்ட பருவத்திற்கு ஏற்ப விவசாயம் செய்கின்றனர். இதனை எடுத்து அரசு விதிகளை மீறி அதிக அளவிற்கு ஹிட்டாச்சி இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டமும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் சமீபத்தில் இந்த மணல் குவாரியில் முன் விரோத காரணமாக லாரி ஓட்டுநர் ஒருவரை மற்றொரு ஓட்டுனர் இரண்டு நாட்களுக்கு முன்பு கத்தியால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டு மீண்டும் செயல்பட தொடங்கிவிட்டது.
மேலும் இது குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கையில் அரசு விதிகளை மீறி மணல் எடுப்பதால் விவசாயத்திற்கு குடிப்பதற்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து காணப்படுவதாகவும். இதனால் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றிவிடும் அபாயமும் உருவாகி இருப்பதாக எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மணல் குவாரியில் ஆய்வு செய்து. நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கரப்பாக்கம் கிராம பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu