பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா
X

பெரியபாளையம் அருகே எல்லாபுரம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு  வடக்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

வடமதுரையில் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் கொண்டாடப்பட்டது

பெரியபாளையம் அருகே எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பெரியபாளையம் அடுத்த வடமதுரை ஊராட்சி அரசு தொடக்க பள்ளி அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.ஜே. மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதனைத் தொடர்ந்து அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கும் ஒன்றிய செயலாளர் பி. ஜே.மூர்த்தி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி. ராமமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆதிதிராவிடர் அமைப்பாளர் ஏனம்பாக்கம் சம்பத்,வி.பி. ரவிக்குமார், ஒன்றிய அவைத்தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன்,முனுசாமி, வடமதுரை ஒன்றிய கவுன்சிலர் ஜமுனா அப்புண், முகமது மொய்தீன், கார்த்திகேயன், வடமதுரை கிளைச் செயலாளர் ரமேஷ், காக்க வாக்கம் சுமன், ஆறுமுகம், உமாபதி, தரணி ராஜன், பார்த்திபன்,முகுதீன், சந்திரசேகர்,பாபு. ஆகியோர் உட்பட ஏராளமான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
ai solutions for small business