எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்..!

எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்..!
X

பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன்.

பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் டி.ஜெ. கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு.

பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர் கூட்டம் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக பொறுப்பேற்க தீர்மானம் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் பெரியபாளையம் அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினரும், வடக்கு ஒன்றிய செயலாளருமான பி.ஜெ. மூர்த்தி தலைமை வகித்தார் .

ஒன்றிய அவைத்தலைவர் ரவிச்சந்திரன்,மாவட்ட பிரதிநிதிகள் சண்முகம், வெங்கடேசன், சிவசங்கர், துணைச்செயலாளர்கள் சிவாஜி,டில்லிசங்கர், ஜமுனா அப்புன், பொருளாளர் ரவி ஆகியோர் வரவேற்றனர்.

மாவட்ட அவைத் தலைவர் நிர்வாகிகள் பகலவன், மாவட்ட துணை செயலாளர்கள் எம்.எல். ரவி,கதிரவன்,கேவிஜி. உமாமகேஸ்வரி, மாவட்ட பொருளாளர் ரமேஷ்,பொதுக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலபதி, குணசேகரன்,சுப்பிரமணி, ஏவி.ராமமூர்த்தி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என்.கிருஷ்ணமூர்த்தி, லோகேஷ்,விபி. ரவிக்குமார், சம்பத், சித்ரா முனுசாமி , ஜெயலலிதா, தனசேகரன், ஊத்துக்கோட்டை நகர செயலாளர் அபிராமிகுமரவேல், சுமன், கோல்டுமணி , ராஜேஷ், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமிக்க வேண்டும், வயது மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குவது, கும்மிடிப்பூண்டி தொகுதியில் கலைஞர் சிலை வைக்க எல்லாபுரம் ஒன்றியத்தின் சார்பில் ₹ 5 லட்சம் வழங்குவது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் சி.எச்.சேகர், அன்புவாணன், ஜி.ஸ்டாலின்,பூண்டி ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், வழக்கறிஞர் சீனிவாசன்,ராஜா, ஆத்துப்பாக்கம் வேலு , உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர் நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!