கும்மிடிப்பூண்டி அருகே நேரிட்ட தீ விபத்தில் மூதாட்டி மரணம்

கும்மிடிப்பூண்டி அருகே  நேரிட்ட  தீ விபத்தில் மூதாட்டி மரணம்
X

கும்மிடிப்பூண்டி அருகே சுண்ணாம்பு குளம் ஊராட்சி, நரசம்பாளையம் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே அதிகாலையில் ஏற்பட்ட தீ யில் மூதாட்டி இறந்தார் அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவியதால் நகை பணம் சேதமடைந்தன

கும்மிடிப்பூண்டி அருகே சுண்ணாம்பு குளம் ஊராட்சி, நரசம்பாளையம் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி உயிரிழந்தார். அடுத்தடுத்து வீடுகளுக்கு தீ பரவியதால் ரொக்கம் பணம், தங்க நகைகள் தீயில் கருகி சேதம்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, சுண்ணாம்பு குளம் ஊராட்சி நரசம்பாளையம் கிராமத்தில். மின் கசிவினால் இன்று அதிகாலை 2.மணி அளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கோவிந்தராஜ் (85), ராஜம்மாள் (80). தம்பதியரின் வீடு எரிந்து சேதமானது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜம்மாள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக கோவிந்தராஜ் உயிர்த்தப்பினார்.

வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் தீக்கிரையான நிலையில், வீட்டின் அருகாமையில் இருந்த வீட்டிலும் தீ பரவியதில் உமாபதி (40), கற்பகம் (38) காயத்ரி (15), தமிழரசி (12) ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். மேலும் வீட்டிலிருந்த 70 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், 6 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி கொலுசுகள் உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதம் ஆனது.

தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலையங்களை சார்ந்த மூன்று தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆரம்பாக்கம் போலீசார் உயிரிழந்த ராஜம்மாளின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தீ விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!