ஏரியின் அருகே குப்பைகள் கொட்டுவதால் குடி தண்ணீரில் கலக்கும் அபாயம்

ஏரியின் அருகே குப்பைகள் கொட்டுவதால் குடி தண்ணீரில் கலக்கும் அபாயம்
X

பெரியபாளையம் அருகே ஏரி பகுதியில் குப்பைகள் கழிவுகள் கொட்டுவதால் குடி தண்ணீர் மாசு ஏற்படும் அபாயம்

பெரியபாளையம் அருகே ஏரி பகுதியில் குப்பைகள் கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெரியபாளையம் அருகே ஏரி பகுதியில் குப்பைகள் கழிவுகள் கொட்டுவதால் குடி தண்ணீர் மாசு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்த கும்பரப்பேட்டை ஊராட்சியில் சுமார் 3. ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அஞ்சாத அம்மன் கோவில் அருகே ஏரி ஒன்று உள்ளது.

இந்த ஏரிக்கு அருகாமையில் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு இங்கிருந்து தண்ணீர் பழுப்புகள் மூலம் கொண்டு சென்று ஊராட்சியில் பல பகுதிகளில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டிகளுக்கு கொண்டு சென்று நாள்தோறும் காலையும் மாலையும் கும்பரப்பேட்டை ஊராட்சி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும்.

இதனை அடுத்து இப்பகுதிகளில் வீடுகளில் இருந்து குப்பைகள் மற்றும் ஹோட்டல்களில் இருந்து சாப்பிடும் இலைகள் உள்ளிட்டவை இது மட்டுமல்லாமல் அப்பகுதியில் இறைச்சிக் கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகளை சேகரித்து கொண்டு வந்து ஏரியின் பகுதியில் கொட்டுவதால் இதனை உட்கொள்ள அங்க சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் நாய்களால் கிளறி விடப்பட்டு காற்றில் பறந்து குப்பை கூளங்கள் தண்ணீரில் விழுகின்றது.

இப்பகுதியில் குப்பைகளை கொட்ட கூடாது என்று ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை ஒன்றை வைத்தும் அதனை பொருட்படுத்தாமல் அப்பகுதி ஹோட்டல்கள் வீடுகள் மற்றும் இறைச்சி கழிவுகளை. காலாவதியான உணவுப் பொருட்களை கொண்டு வந்து கொட்டி வருகின்றனர். இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags

Next Story